போர் மேகம் முற்றிலும் கலைந்தது: ஈரானில் 20 நாட்கள் கழித்து விமான சேவை தொடக்கம்

டெஹ்ரான்: 20 நாட்கள் கழித்து ஈரானில் மீண்டும் பன்னாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.



ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே ஜூன் 13ம் தேதி போர் மூண்டதால் இரு நாடுகளும் தங்கள் வான்வழி பாதையை மூடின. பயணிகள் விமானம் உள்பட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.


12 நாட்கள் கழித்து ஜூன் 24ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. தற்போது இரு நாடுகளிலும் போர் நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. இந் நிலையில், ஈரானில் இயல்பு நிலை திரும்புவதின் ஒரு தொடக்கமாக இன்று முதல் பன்னாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது.


பன்னாட்டு நகரங்களுக்கு பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. தலைநகர் டெஹ்ரானில் இருந்து துபாய்க்கு முதல் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம் பத்திரமாக துபாய்க்கு சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.


அடுத்து வரும் நாட்களில் சில குறிப்பிட்டு பன்னாட்டு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement