விபத்தில் முதுகு தண்டு பாதிப்பு பெண்ணுக்கு ரூ.3 கோடி இழப்பீடு



சேலம், சேலத்தை சேர்ந்தவர் கவிதா, 49. இவர், 2024 செப்., 13ல், 'பலேனோ' காரில், சேலம் - கோவை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, தாழையூர் பகுதியில் உள்ள பாதுகாப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கவிதாவின் இருபுற விலா எலும்புகள், முதுகு தண்டு முறிவு ஏற்பட்டது. அவரது உடல் முழுதும் செயலிழந்தது.

பாதிக்கப்பட்ட கவிதா, இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதில் சமரசம் ஏற்பட்டு, இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில், 3 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கான காசோலையை, மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, நேற்று கவிதாவிடம் வழங்கினார்.

Advertisement