கர் நாடகா ஸ்பெஷல் உடுப்பி ரசம்

செய்முறை



அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மல்லி, சீரகம், காஷ்மீர் மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயத்தை போட்டு நன்கு வதக்கி சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.

சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விடவும்.

குக்கர் விசிலின் சூடு ஆறியதும் திறந்து, துவரம்பருப்பை நன்கு மசித்து விடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, மஞ்சள், பெருங்காய பவுடர் போட்டு அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளி வதக்கியதும், மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த விழுது, மசித்த பருப்பு போட்டு நன்கு கலந்து விடவும். பின், புளி தண்ணீர், வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி சிறிதளவு துாவி இறக்கவும்.

பின், வாணலியில் நெய் ஊற்றி சீரகம், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான உடுப்பி ஸ்டைல் ரசம் தயார்.

இதனுடன் உருளை கிழங்கு பொரியல் வைத்து சாப்பிட்டால், சூப்பர் காம்பிஷேனாக இருக்கும். மற்ற ரசத்தை விட வித்தியாசமாக இருக்கும்.

Advertisement