ஆனியன் மஷ்ரூம் டோஸ்ட் செய்வது எப்படி?

வார இறுதி நாட்களில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே வித்தியாசமான முறையில் ஸ்நாக்ஸ்கள் செய்து சாப்பிடலாம். ஆனியன் மஷ்ரூம் டோஸ்ட் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாமா?
செய்முறை
முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பின், அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இதில், மஷ்ரூம், உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கிய பின் மிளகாய் துாள், சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
இதில், மைதா மாவை பாலில் கலந்து அதனையும் சேர்த்து நன்றாக கிளறவும். வெண்ணெய் சேர்த்து நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும். அவ்வளவு தான்; கலவை தயார்.
இதையடுத்து, தோசைக் கல்லில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பிரட்டுகளை இரண்டு பக்கமும் போட்டு, நன்கு டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த டோஸ்ட் செய்யப்பட்ட பிரட் துண்டுகள் மீது தயார் நிலையில் உள்ள மஷ்ரூம் கலவையை சேர்க்கவும். சுவையான, சூப்பரான ஆனியன் மஷ்ரூம் டோஸ்டர் தயார்.
இதை சூடு ஆறுவதற்குள் சாப்பிடுவது முக்கியம். மாலை நேரத்தில், குளிர்பானங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை மிரட்டலாக இருக்கும்
- நமது நிருபர் -.
மேலும்
-
அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி
-
நாட்டு வெடிகுண்டு தயாரித்து 'இன்ஸ்டா'வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது
-
தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவர்: ஐகோர்ட் கேள்வி
-
சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி ஆசிர்வதித்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
-
பீஹாரில் தொழிலதிபர் கெம்கா வீட்டின் முன் சுட்டுக்கொலை!
-
இரவு பகல் பாராமல் 'லேப்டாப்' பயன்படுத்துவதால் ஆண்களுக்கு பாதிப்பு: டாக்டர் காமராஜ் எச்சரிக்கை