விருந்தாளிகளை அசத்தும் ரவை அல்வா

அல்வா என்றால் நாவில் எச்சில் ஊறும். அல்வா என்றால் முதலில் பாதாம் அல்வா, கேரட் அல்வா நினைவுக்கு வரும். ரவையிலும் கூட சூப்பர் சுவையான அல்வா செய்ய முடியும். அதை எப்படி செய்வது என பார்க்கலாமா?
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து, ரவையை கருகாமல் வறுக்கவும். ரவை பொன்னிறமாக மாறி நறுமணம் வர துவங்கியதும், அதை தனியாக தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் நெய் ஊற்றவும். அதில் ஏலக்காய் துாள் போடவும். ரவையை போட்டு நன்றாக கிளறவும். இரண்டு நிமிடங்களுக்கு பின், இரண்டு தம்ளர் நீரை சேர்க்கவும். மிதமான தீயில் வைப்பது அவசியம். கை விடாமல் கிளறவும்.
கலவை கெட்டியாக துவங்கியதும், சர்க்கரை, சிட்டிகை உப்பு சேர்க்கவும்.ரவை பொன்னிறமாக மாறி, நெய் தனியாக பிரிந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.
உலர்ந்த பழங்களை சிறிது நெய்யில் வறுத்து, அல்வாவில் துாவி ஒரு கிளறு கிளறினால், சூடான ரவை அல்வா ரெடி.
மாறுபட்ட சுவையுடன் இருக்கும். வீட்டுக்கு திடீரென விருந்தாளிகள் வந்தால், ரவை அல்வா செய்து கொடுத்து அசத்தலாம்
- நமது நிருபர் -.
மேலும்
-
அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி
-
உ.பி., யில் சோகம்! கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
-
நாட்டு வெடிகுண்டு தயாரித்து 'இன்ஸ்டா'வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது
-
தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவர்: ஐகோர்ட் கேள்வி
-
சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி ஆசிர்வதித்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
-
பீஹாரில் தொழிலதிபர் கெம்கா வீட்டின் முன் சுட்டுக்கொலை!