மலேஷியாவின் ஓடக் ஓடக் அசைவ உணவு

செய்முறை:
மிக்சியில் 100 கிராம் சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு, விதை நீக்கிய இரண்டு பச்சை மிளகாய், பத்து காய்ந்த மிளகாய் (விதை நீக்கி சில நிமிடம் தண்ணீரில் ஊறவைத்தது), 20 கிராம் இஞ்சி, பொடிப்பொடியாக நறுக்கிய லெமன்கிராஸ் இரண்டு ஸ்பூன் போட்டு பேஸ்ட் போல் அரைக்கவும்.
அடுத்ததாக 250 கிராம் மீன் எடுத்துக்கொள்ளவும். எந்த மீனாக இருந்தாலும் முள் நீக்கி இறைச்சி பகுதியை பயன்படுத்தலாம். அதுபோன்று, 250 கிராம் சுத்தமாக கழுவிய இறால் பயன்படுத்தவும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் துாள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒன்றரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் சோள மாவு, இரண்டு முட்டையின் வெள்ளை கரு சேர்த்து மிக்ஸ் சேர்த்து, மிக்ஸியில் போட்டு, 200 மில்லி தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
இப்போது வாழை இலையை சில நிமிடங்களுக்கு வெந்நீரில் மூழ்கி எடுத்து நல்லெண்ணெயை, அதன் மீது தடவவும். இதில் அரைத்த மீன்-, இறால், -தேங்காய் பால் கலவையை இரண்டு அடுக்குகளாக ஸ்டப்பிங்' செய்யவும்.
பின் இட்லி குக்கரில் ஸ்டப்பிங்' செய்த வாழை இலைகளை செவ்வக வடிவில் மடித்து, பல் குத்தும் குச்சியில் மூடி, எட்டு நிமிடங்களுக்கு வேகவிடவும். இறுதியாக பேனில் நல்லெண்ணெய் ஊற்றி வாழை இலையை இதில் வைத்து இருபுறமும் தலா இரண்டு நிமிடங்களுக்கு வறுக்கவும்.
அப்புறம் என்ன, மலேஷியாவின் சூப்பரான ஓடக் ஓடக் உணவு ரெடி.
மேலும்
-
உலக போலீஸ் விளையாட்டு போட்டி; பதக்கம் குவித்த இந்திய வீராங்கனை
-
டிரம்ப் விதித்த காலக்கெடு: ஜோதிடம் சொல்கிறார் ராகுல்!
-
ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!
-
அந்த நாள் ஞாபகம் வந்ததே; வயலில் இறங்கி நாற்று நட்ட உத்தரகண்ட் முதல்வர்
-
போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம்: காலை 8 மணிக்கே விசாரணையை தொடங்கிய நீதிபதி
-
அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி