மோசமான நிலையில் பஞ்சப்பட்டி சுகாதார வளாகம்



கிருஷ்ணராயபுரம்,பஞ்சப்பட்டி நெடுஞ்சாலை அருகில் உள்ள, சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பஞ்சப்பட்டி பஞ்சாயத்து சுகாதார வளாகம் மைலம்பட்டி, தரகம்பட்டி நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி, அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருகிறது. மேலும் வளாகத்தில், கதவுகள் இன்றி காணப்படுகிறது. சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்படுத்தும் வகையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement