மாயனுாரில் பராமரிப்பு இல்லாத சின்டெக்ஸ் தொட்டி


கரூர், மாயனுாரில் பராமரிப்பு இல்லாமல், போர்வெல் குழாய் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.

மாயனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, பொது மக்கள் பயன்பாட்டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன், போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. அதில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்நிலையில், போர்வெல் குழாய் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி முட்புதர்கள் முளைத்துள்ளது.

இதனால், தொட்டியை பயன்படுத்த முடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, போர்வெல் குழாயை சீரமைத்து, சின்டெக்ஸ் தொட்டியை மாயனுார் பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement