கங்கையம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா விமரிசை படம் மட்டும்

மேல்பேரமநல்லுார்:காஞ்சிபுரம் அடுத்த மேல்பேரமநல்லுார் கங்கையம்மன், மொழுதியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலை, மேல்பேரமநல்லுாரில் உள்ள கங்கையம்மன், மொழுதியமமன் கோவில் கூழ்வார்த்தல் விழா கடந்த 1ம் தேதி காலை 7:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது. மதியம் 12:00 மணிக் அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கங்கை அம்மன் வீதியுலா வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மொழுதி அம்மன் வீதியுலா வந்தார். இரவு 10:00 மணிக்கு ஆரணி துளசி நாடக மன்ற குழுவினரின் நாடகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை நாட்டாண்மைதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
மேலும்
-
பீஹாரில் பா.ஜ. முக்கிய பிரமுகர், தொழிலதிபர் கெம்கா வீடு முன்பு சுட்டுக்கொலை!
-
இரவு பகல் பாராமல் 'லேப்டாப்' பயன்படுத்துவதால் ஆண்களுக்கு பாதிப்பு: டாக்டர் காமராஜ் எச்சரிக்கை
-
ரிதன்யா மரணத்தில் அரசியல் அழுத்தம்: சீமான்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!