வக்கீல் சங்க தலைவருக்கு வாட்ஸ்ஆப் காலில் மிரட்டல்

கரூர், கரூரில், வக்கீல் சங்க தலைவரை வாட்ஸ் ஆப் கால் மூலம் மிரட்டிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை சுங்க கேட் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வக்கீல் மாரப்பன், 58. இவர் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு தலைவராகவும் உள்ளார்.

கடந்த, 2ம் தேதி மாரப்பனின் மொபைல் போன் வாட்ஸ் ஆப் காலில், தொடர்பு கொண்டு பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, வக்கீல் மாரப்பன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., தில்லைக்கரசி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாட்ஸ் ஆப் காலில் மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

Advertisement