ஜெகந்நாதர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்

திருமழிசை:திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோத்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருமழிசையில் ஜெகந்நாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆனி பிரம்மோத்சவ திருவிழா நேற்று காலை 6:00 - 7:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை, தங்க தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
பிரம்மோத்சவ திருநாளில் தினமும் காலை - மாலை, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, நாளை காலையிலும், தேர் திருவிழா 10ம் தேதி காலையும் நடைபெறும்.
வரும் 12ம் தேதி மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோத்சவ திருவிழா நிறைவுபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரவு பகல் பாராமல் 'லேப்டாப்' பயன்படுத்துவதால் ஆண்களுக்கு பாதிப்பு: டாக்டர் காமராஜ் எச்சரிக்கை
-
ரிதன்யா மரணத்தில் அரசியல் அழுத்தம்: சீமான்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!
-
இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறி விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
Advertisement
Advertisement