ஏரி, குளம் மேம்பாட்டு பணி துவக்கம்

காக்களூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரி மற்றும் தாமரைக்குளம், 2.27 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி துவக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஏரி மற்றும் தாமரைக்குளம் ஆகிய இரண்டும், 2.27 கோடி ரூபாய் மதிப்பில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

காக்களூர் ஊராட்சி மற்றும் திருவள்ளூர் நகராட்சி எல்லையில், 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரி மற்றும் தாமரைக்குளத்தை, 2.27 கோடியில் மேம்படுத்தி நடைபாதை, மின் விளக்குகள், நடைபயிற்சியாளர் அமர இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான துவக்க விழா, கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், இத்திட்ட பணியை பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தார்.

Advertisement