பூட்டிய வீடுகளில் நகை திருட்டு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் பூட்டி உள்ள 2 வீடுகளில் 10 பவுன் 3 கிராம் நகை கொள்ளை போனதை போலீசார் விசாரிக்கின்றனர்.
பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட் புதிய பணியாளர் குடியிருப்பு உள்ளது. நிறுவனத்தில் ஆப்பரேட்டராக மல்லாங்கிணரை சேர்ந்த ஜெயராம்,45, வேலை பார்த்து வருகிறார். இவர் வீடு அருகில் வச்சகாரப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார், 34, நிறுவனத்தில் இஞ்சினியராக உள்ளார்.
இருவரும் தங்கள் குடும்பத்துடன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா விற்காக 6 நாட்கள் ஜுன் 30 ல், குற்றாலம் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இவர்களுடைய வீட்டின் கதவு திறந்து இருப்பதாக அக்கம், பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இருவரும் தங்கள் வீடுகளுக்கு சென்று பார்த்தபோது, ஜெயராம் வீட்டு பீரோவில் இருந்து 10 பவுன் நகையும், சதீஷ்குமார் வீட்டில் இருந்து 3 கிராம் நகையும் திருடு போனதும் தெரிய வந்தது.
இதுகுறித்து பந்தல்குடி போலீசார் அந்தப் பகுதி உள்ள சிசிடிவி., கேமராக்கள், அலைபேசி டவர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ராமேஸ்வரம் கோவிலில் சிருங்கேரி சுவாமிகள் பூஜை
-
கைதான போலீசாரிடம் மனித உரிமை கமிஷன் விசாரணை
-
ஆன்மிக நிகழ்வுகளில் யானைகளுக்கு கட்டுப்பாடு; கலாசாரத்தை வனத்துறை அழிப்பதாக ஆன்மிகவாதிகள் வேதனை
-
மத்திய அமைச்சர்கள் மீது மோடி கோபம்
-
மஹாராஷ்டிரா பா.ஜ., கூட்டணியில் குழப்பம்
-
டில்லி உஷ்ஷ்ஷ்: 'ரிட்டையர்' ஆகிறாரா ஸ்மிருதி?