குடிசைக்கு தீ வைப்பு
சாணார்பட்டி: கொசவபட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் கஸ்பார் 34. இவருக்கு சொந்தமான தோட்டம் விராலிபட்டியில் உள்ளது.
இவரது அண்ணன் லியோ ஜான்கென்னடிக்கு திருமணமாகாததால் தாய் மரிய ரத்தினத்துடன் தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தார்.
சொந்த வேலை காரணமாக 2 பேரும் வெளியே சென்றனர். அப்போது தோட்டத்து வீட்டில் இருந்த குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.வீட்டில் இருந்த வயர், பி.வி.சி.பைப், வெங்காய விதைகள் உட்பட விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் எரிந்து சாம்பலானது . சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement