'பெராரி' சொகுசு காருக்கு ரூ.1.42 கோடி அபராதம்

பெங்களூரு: கர்நாடகாவில், வரி செலுத்தாமல், 'பெராரி' சொகுசு காரை ஓட்டி வந்த நபர், 1.42 கோடி ரூபாய் அபராதம் செலுத்தி காரை மீட்டுள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூரு ஜெயநகர், லால்பாக் பகுதியில், மஹாராஷ்டிர பதிவெண் உடன், 'பெராரி எஸ்.எப்., 90 ஸ்ட்ராடேல்' சொகுசு கார் அடிக்கடி சென்று வருவதை போக்குவரத்து போலீசார் நோட்டம் விட்டனர்.
இந்த காரின் விலை, 7.50 கோடி ரூபாய். அதை ஓட்டி வந்தவரை போலீசார் மடக்கி விசாரித்தனர். கர்நாடகாவில், வேற்று மாநில பதிவு உடைய காரை ஓராண்டு வரை மட்டுமே வரியின்றி பயன்படுத்த அனுமதி உள்ளது.
அதன் பின், கர்நாடக போக்குவரத்து துறைக்கு சாலை வரி செலுத்த வேண்டும். 'பெராரி' கார் உரிமையாளர் 18 மாதங்களுக்கு மேலாக சாலை வரி கட்டாதது தெரியவந்தது.
இதையடுத்து, அவருக்கு வரியுடன் 1.42 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; கட்டத் தவறினால் கார் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து உரிமையாளர் காருக்கான சாலை வரி மற்றும் அபராத தொகையான 1.42 கோடி ரூபாயை செலுத்தி விட்டு காரை மீட்டார்.
மஹாராஷ்டிராவில் வாகனங்களுக்கான வரி, கர்நாடகாவை காட்டிலும் குறைவு என்பதால் உரிமையாளர் அதனை அதை வாங்கிவிட்டு கர்நாடகாவில் ஓட்டி வந்ததாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும்
-
இரவு பகல் பாராமல் 'லேப்டாப்' பயன்படுத்துவதால் ஆண்களுக்கு பாதிப்பு: டாக்டர் காமராஜ் எச்சரிக்கை
-
ரிதன்யா மரணத்தில் அரசியல் அழுத்தம்: சீமான்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!
-
இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறி விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்