செல்போன் டவரில் கேபிள் திருட்டு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதியில் செல்போன் டவர் உள்ளது.

அதன் ஒரு பகுதியாக அரும்பட்டு கிராமத்தில் உள்ள செல்போன் டவருக்கு அந்த நிறுவன ஊழியர்கள் பராமரிப்பு பணிக்காக கடந்த 2ம் தேதி காலை 11:00 மணிக்கு சென்றனர்.

அப்போது டவரிலிருந்து ஜெனரேட்டர் ரூமிற்கு சென்ற 150 மீட்டர் கேபிள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement