போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம்: காலை 8 மணிக்கே விசாரணையை தொடங்கிய நீதிபதி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் காலை 8 மணிக்கே விசாரணையை நீதிபதி தொடங்கி விட்டார்.
கடந்த ஜூன் 27ம் தேதி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர் நிகிதாவின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை, பணம் திருடு போன சம்பவம் தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார், கோவில் நிறுவன பாதுகாப்பு ஊழியர் அஜித்குமாரை அழைத்து விசாரித்த போது உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் என்பவர் விசாரணை நடத்தி வருகிறார். வரும் ஜூலை 8ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜூலை 2ம் தேதி முதல் விசாரணை நடத்தி வரும் நீதிபதி இன்று (ஜூலை 05) காலை திடீரென திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை மேற்கொண்டார்.
ஏ.டி.எஸ்.பி., சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் , எஸ்.ஐ., சிவப்பிரகாசம், எஸ்.எஸ்.ஐ., சிவகுமார் உள்ளிட்டோர் ஆஜராகி உள்ளனர். 4வது நாளாக இன்று நடக்கும் விசாரணையில் திருட்டு புகார் கொடுத்த நிகிதா ஆஜராக உள்ளதாக தெரிகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி., சண்முக சுந்தரம் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.



மேலும்
-
வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது
-
கேரளாவில் அமைச்சருக்கு எதிராக வெடித்த போராட்டம்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு
-
ராகுலை யாரும் மதிப்பது இல்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி
-
தமிழ்ப்பற்றை மீண்டும் வெளிப்படுத்தினார் பிரதமர்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மகிழ்ச்சி
-
அ.தி.மு.க., கொள்கை எதிரியா? இல்லையா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி
-
காவல்துறை தடம் புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு