வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம் : போலீஸ் ஏட்டுவை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த நன்னாடு பகுதியை சேர்ந்தவர் நீலசூர்யவர்மன், 25; இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் 'டிராபிக்' போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக நினைத்துக்கொண்டு, மேற்கு காவல் நிலையம் முன் வந்தார்.

அங்கு அவர் தன் மீது பெட்ரோல் ஊற்ற முயன்றார். அதை அங்கிருந்து போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் தடுத்தார். அப்போது, ராமச்சந்திரனை பணி செய்யவிடாமல் நீலசூர்யவர்மன் தடுத்தார்.விழுப்புரம் மேற்கு போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement