ரயில்வே மேம்பாலத்தில் பணி முடிந்து கிழக்கு பகுதி சாலை மீண்டும் திறப்பு

புதுச்சேரி : நுாறடி சாலையின் கிழக்கு பகுதி சுவர் பலப்படுத்தும் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி 100 அடி சாலையில், ரயில்வே கிராசிங்கில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி 1.20 கி.மீ., நீளத்திற்கு மேம்பாலம் திறக்கப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் யார் கண்பட்டதோ தெரியவில்லை. பல ஆண்டுகளாக மேம்பால சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை மிரட்டி வந்தது.
போதாக்குறைக்கு ரயில்வே பாலத்தின் பக்க சுவர் பகுதி தற்போது விரிவாக்கமடைந்து பாலத்தின் கீழ் மணல்கொட்டி அடுத்த பீதியை ஏற்படுத்தியது. பொதுமக்களின் அச்சத்தை தொடர்ந்து இப்பாலத்தினை பலப்படுத்தும் பணி கடந்த மே மாதம் 8ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
பாலத்தின் கிழக்கு பகுதியான ஆர்.டி.ஓ., அலுவலகம் பக்கம் சாலையை முழுதுமாக மூடப்பட்டது. இதனால் பாலத்தின் ஒரு பக்கம் மட்டுமே வாகனங்கள் சென்று வந்தன. இந்த கிழக்கு பக்க சுவர் பலப்படுத்தும் பணி நிறைவடைந்த நிலையில், நேற்று முதல் ஆர்.டி.ஓ., அலுவலகம் பக்கம் நுாறடி சாலை பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சாலையில் நடுவே இருந்த தடுப்புகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. அடுத்து, மேற்கு பக்கத்தில் ரயில்வே மேம்பால பக்க சுவர்கள் பலப்படுத்தும் பணி துவக்கப்பட உள்ளது.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே மேம்பாலத்தில் மணல் தளர்ந்துள்ள பகுதிகளில் 'நெய்லிங் புராசஸ்' பணியை துவங்கியுள்ளோம். மணல் தளர்ந்துள்ள பகுதிகளில் ரசாயனம் கலந்த கான்கிரீட் கலவை கொட்டி பலப்படுத்தி வருகிறோம்.
கிழக்கு பகுதியில் 300 பாயிண்ட், மேற்கு பகுதியில் 300 பாயிண்ட் என மொத்தம் 600 பாயிண்ட்களில் ட்ரில் போட்டு கான்கிரீட் கலவை கொட்டி பலப்படுத்த வேண்டும். இதில் 300 பாயிண்ட்களில் கான்கிரீட் கலவை கொட்டும் பணி முடிந்துவிட்டது. மீதமுள்ள 300 பாயிண்ட்களில் பலப்படுத்தும் பணியும் துவக்கப்பட்டுள்ளது' என்றனர்.
மேலும்
-
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்... கேலிப்பொருளாக மாறியது ரூ.640 கோடி போர் விமானம்!
-
அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா: தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்!
-
காரை தாக்கிய காட்டு யானை: 4 பேர் உயிர் தப்பினர்!
-
உலக போலீஸ் விளையாட்டு போட்டி; பதக்கம் குவித்த இந்திய வீராங்கனை
-
டிரம்ப் விதித்த காலக்கெடு: ஜோதிடம் சொல்கிறார் ராகுல்!
-
ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!