'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் விழா

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி, பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழை பள்ளி முதல்வர் தேவதாஸ் மாணவர்களுக்கு வழங்கினார்.

மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் மாணவர் பதிப்பு பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.

புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வழங்கும் விழா நடந்தது.

பள்ளி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கி, இந்த கல்வியாண்டு முழுதும் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், வேதியியல் துறைத் தலைவர் பீட்டர் ஜார்ஜ், ஆசிரியர் ஜான் பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement