வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்க தொகை திட்டம்

புதுச்சேரி : வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான திறன்கள் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை, திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, புதுச்சேரி மண்டல அலுவலக செய்திகுறிப்பு:

இந்த திட்டமானது, முதன் முறையாக வேலை செய்பவர்களையும், உரிமையாளர்களையும் மையமாக கொண்டுள்ளது. அதில், ஒரு பகுதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், பதிவு செய்த ஊழியர்களை இலக்காக கொண்டுள்ளது. முதன் முறையாக பணியமர்த்தப்பட்டவர்களுக்கு ஒரு மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்கள் இதற்கு தகுதியுடையவர்கள்.

மற்றொரு பகுதியானது, அனைத்து துறைகளிலும், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை உள்ளடக்கியதாகும். அதில், உற்பத்தி துறையில், சிறப்பு கவனம் செலுத்தும், 1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு, உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெறுவார்கள். குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு நிலையான வேலை வாய்ப்புடன் கூடுதலாக, பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு, மாதத்திற்கு 3 ஆயிரம் வரை உரிமையாளர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும். இந்த திட்டத்தை பற்றி www.pib.gov.in இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement