ரூ.55.50 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி

திருபுவனை : நல்லுார் காலனியில் ரூ.55.50 லட்சம் செலவில் புதிய சாலைகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் 'பாட்கோ' சார்பில், திருபுவனை தொகுதி, நல்லுார் காலனியில் அரசு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் ரூ.55.50 லட்சம் செலவில் புதிய சாலைகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பாட்கோ செயற்பொறியாளர் பக்தவச்சலம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தனர்.

உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர்கள் திருவருட்செல்வன், பாஸ்கர், ஒப்பந்ததாரர் திருநாவுக்கரசு உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement