ஆற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி

காரைக்கால் : காரைக்காலில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் முழ்கி இறந்தார்.

காரைக்கால், நெடுங்காடு, அகரமாங்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் வினோத், 30; வெல்டர். கோயம்புத்துாரில் வேலை செய்யும் இவர், கடந்த இருதினங்களுக்கு முன், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் அதேப் பகுதியை சேர்ந்த பிரகாஷ், ஸ்ரீராம், புருஷோத்தமன் ஆகியோருடன் வினோத் அகரமாங்குடி காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு அனைவரும் மது அருந்தியுள்ளனர். இதனிடையே வெகுநேரம் ஆகியும் வினோத் வீட்டுக்கு வரவில்லை. அனைவரும் அவரை தேடியபோது ஆற்றுத் தண்ணீரில் மூழ்கி அவர், உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement