மரக்கன்று நடும் விழா

புதுச்சேரி: பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது.

புதுச்சேரி அரசு கூட்டுறவு துறையின் வழிகாட்டுதலின்படி, 'சர்வதேச கூட்டுறவு ஆண்டு-2025' கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உருளையன்பேட்டை ஜே.வி.எஸ். நகர் வாட்டர் டேங்க் வளாகத்தில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் 'நம் தாயின் பெயரில் ஒரு மரம்' கருத்தை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

சங்கத்தின் தலைவர் இளங்கோ தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார். சங்கத்தின் துணைத் தலைவர் வீரபுத்திரன், பொருளாளர் சரவணன், இயக்குனர்கள் செந்தில்வேலு, இளங்கோ அரசன், அண்ணாமலை, கருணாகரன், பச்சையப்பன், அருள்முத்து, செயலாளர் கிருஷ்ணன், மேலாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement