புதுச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு மைதானத்தில் நாளை துவக்கம்

வில்லியனுார் : புதுச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி, துத்திப்பட்டு சி.ஏ.பி., மைதானத்தில் நாளை மாலை துவங்குகிறது.
இது குறித்து புதுச்சேரி சி.ஏ.பி., (கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி) தலைவர் தாமோதரன் கூறியதாவது:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு, புதுச்சேரி பிரிமியர் லீக் (பி.பி.எல்.,) போட்டிகள் நாளை மாலை துவங்குகிறது. வரும் 27ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. லீக் போட்டிகள் பகல் 2:00 மணிக்கும், மாலை 6:00 மணி என இரு வேளைகள் நடக்கிறது.
இப்போட்டியில் வில்லியனுார் மோஹித் கிங்ஸ், ஊசுடு அக்காடு வாரியர்ஸ், மாகே மைலோ ஸ்ட்ரைக்கர்ஸ், காரைக்கால் நைட் ரைடர்ஸ், ரூபி வைட் டவுன் லெஜெண்ட் மற்றும் ஏனம் ஜெலிட் ராயல்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
போட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியுடன் ஆன்ட்டி கரப்ஷன் யூனிட் மேற்பார்வையில் நடக்கிறது. போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதியும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழியில் நேரடி வர்ணனையோடு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மேலும் ஐ.பி.எல்., அணிகளின் நிர்வாகிகள் இந்த போட்டியை காண வருகிறார்கள். இதன் மூலம் ஐ.பி.எல்., ஏலத்தில் நமது சி.ஏ.பி., வீரர்களும் சேர்வற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரிய விதிகளின்படி, சி.ஏ.பி., வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சர்வதேச ரஞ்சி கோப்பை போட்டிகள் இங்கே நடந்து வருகிறது. இதனால் ஸ்மார்ட் மைதானமாக நவீன தொழில் நுட்பங்களோடு மாற்ற இருக்கிறோம். ஐ.சி.சி., போட்டிகள் நடந்தவேண்டும் என்றால் புதுச்சேரியில் ஐந்து ஸ்டார் ஓட்டல்கள் இரண்டு இருக்க வேண்டும்' என்றார்.
போட்டியின்போது சி.ஏ.பி., செயலாளர் ராமதாஸ், முன்னாள் செயலாளர் சந்திரன், சி.இ.ஓ., மயக்மேத்தா, பயிற்சியாளர் வெங்கட்ராமன், மோகித் கிங்ஸ் உரிமையாளர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும்
-
அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி
-
உ.பி., யில் சோகம்! கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
-
நாட்டு வெடிகுண்டு தயாரித்து 'இன்ஸ்டா'வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது
-
தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவர்: ஐகோர்ட் கேள்வி
-
சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி ஆசிர்வதித்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
-
பீஹாரில் தொழிலதிபர் கெம்கா வீட்டின் முன் சுட்டுக்கொலை!