நீரஜ் சோப்ரா முதலிடம் * 'கிளாசிக்' ஈட்டி எறிதலில்...

பெங்களூரு: இந்தியாவில் ஈட்டி எறிதல் போட்டியை வளர்க்கும் வகையில் சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்ற 'நீரஜ் சோப்ரா கிளாசிக்' போட்டி, பெங்களூரு, கன்டீவ்ரா மைதானத்தில் நேற்று நடந்தது.
முதல் வாய்ப்பில் தடுமாறிய இந்திய ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, கீழே விழ, 'பவுல்' ஆனது. அடுத்த வாய்ப்பில் ஏமாற்றிய (82.99 மீ.,) நீரஜ் சோப்ரா, 3வது வாய்ப்பில் 86.18 மீ., துாரம் எறிய, முதலிடத்துக்கு முன்னேறினார். 'டாப்-8' இடம் பிடித்த வீரர்களுக்கு மட்டும், கடைசி 3 வாய்ப்பு தரப்பட்டன. மற்ற 4 வீரர்கள் வெளியேறினர்.
முடிவில் நீரஜ் சோப்ரா (86.18 மீ.,) முதலிடம் பிடித்தார். ஜூலியஸ் யேகோ (84.51), இலங்கையின் ருமேஷ் பதிராகே (84.34) அடுத்த இரு இடம் பெற்றனர். இந்தியாவின் சச்சின் யாதவ் (82.33), அமெரிக்காவின் தாம்ப்சன் (81.50), பிரேசிலின் லுாயிஸ் டா சில்வா (80.31), இந்தியாவின் யாஷ்விர் (79.65), 4 முதல் 7 வரையிலான இடம் பிடித்தனர்.
மேலும்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்
-
வியூகத்தை மாற்றிய குருவிகள் புது ரூட்டில் வருகிறது தங்கம்
-
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம் எம்.எல்.ஏ., பங்கேற்பு