மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, : சோழத்தரத்தில் மேல்நிலை நீரத்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த சோழதரம் ஊராட்சியில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலமாக 2 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தொட்டி பராமரிப்பின்றி உள்ளதால் சிமெண்ட் சாலைகள் பெயர்ந்து விழுந்துள்ளது. குடிநீர் கசிவு ஏற்படுவதால் கம்பிகள் துருப்பிடித்து வீணாகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொட்டி எப்போது, வேண்டுமானலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, தொட்டியை பராமரித்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement