பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
கானா, டிரினிடாட் & டுபாகோ, அர்ஜென்டினா நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக, பிரேசிலுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு, இந்திய புலம் பெயர்ந்தோர் ஆபரேஷன் சிந்தூர் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாசார நடனத்தை நடத்தினர். அவர் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன்.
பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின் பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு செல்கிறேன். இந்த பயணத்தில் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும் இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மேலும்
-
5 மாதங்களில் 1,65,136 பேருக்கு நாய்க்கடி: 17 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி; கேரளாவில் ஷாக்
-
காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி