உயிர் நீத்த விவசாய தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

கோவை : கடந்த, 1972ல், அப்போதைய தி.மு.க., ஆட்சியில், ஒரு பைசா மின் கட்டணம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஒருங்கிணைந்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 40க்கு மேற்பட்டோர் பலியாயினர். உயிர் நீத்த விவசாய தியாகிகளுக்கு நினைவஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கோவை திவ்யோதயா அரங்கில் நேற்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சூலுார் வட்டார தலைவர் பழனிசாமி வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் பெரியசாமி, செயலாளர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விவசாய தியாகிகளுக்கு நினைவுத்துாண் அமைக்க வேண்டும். கனிம வள திருட்டு என்ற பெயரில் விவசாயிகள் மீது போடப்படும் வழக்கு மற்றும் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் பயிர் கடன் வழங்க வேண்டும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

@block_B@

'எல்லைக்கல் நடுங்க'

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி, நிருபர்களிடம் கூறுகையில், ''நொய்யல் ஆறு பொலிவிழந்து காணப்படுகிறது; ஆற்றை பராமரிக்க ஒதுக்கும் நிதி எங்கே செல்கிறது என தெரியவில்லை. ஆற்றின் அகலம் எவ்வளவு என்பதை கண்டறிந்து, எல்லைக்கல் நட வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். தென்னை சார்ந்து, 28 வகையான தொழில்கள் உள்ளன; அவற்றை பாதுகாக்க வேண்டும். சிறுவாணி அணையை துார் வார வேண்டும்,'' என்றார்.block_B

Advertisement