டாடா ஏஸ் வேனில் கடத்திய ரூ.1 லட்சம் இரும்பு பறிமுதல்

விருத்தாசலம் : கம்மாபுரம் அருகே என்.எல்.சி., இரும்பு கடத்தி வந்த டாடா ஏஸ் வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி தலைமையிலான போலீசார் சேத்தியாத்தோப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கத்தாழை கிராமத்தில் இருந்து வெளியே வந்த டாடா ஏஸ் வேனை நிறுத்தியபோது, டிரைவர் தப்பியோடினார்.

வேனை சோதனை செய்ததில், என்.எல்.சி., சுரங்கத்தில் பயன்படுத்திய பழைய இரும்பு பைப்புகள் உள்ளிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தளவாடப்பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து இரும்பு பொருட்களை பறிமுதல் செய்து, வேன் உரிமையாளர் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரிய நெற்குணம் ஞானசேகரன் மகன் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

Advertisement