புத்து மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகில் உள்ள புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள், கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், கஜ பூஜைகள் நடந்தன.

நேற்று யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தன. இன்று (6ம் தேதி) காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, ஹோமங்கள் நடக்கிறது.

நாளை 7ம் தேதி காலை 5:00 மணிக்கு, நான்காம் கால பூஜை முடிந்து 9:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு, புத்துமாரியம்மன் மகா அபிஷேகம் மற்றும் வீதியுலா நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினசரி வேத பாராயணம், திருமுறை பாராயணம், நாதஸ்வர கச்சேரி நடந்து வருகிறது.

Advertisement