'ஓப்போ ரெனோ -14 சீரிஸ்' மொபைல் போன்கள் அறிமுகம்

சென்னை :ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம், 'ஓப்போ ரெனோ - 14 சீரிஸ்' என்ற, '5 ஜி' மொபைல் போன்களை, சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது.
இந்தியாவில், ஓப்போ ரெனோ சீரிஸ் ஸ்மார்ட் மொபைல் போன்களுக்கு உள்ள வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையில், 'ஓப்போ ரெனோ - 14 சீரிஸ்' வகையில், '5 ஜி' மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன் அறிமுக விழா, வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நேற்று நடந்தது. நடிகர் அருண் விஜய், 'ஓப்போ ரெனோ - 14 சீரிஸ்' மொபைல் போன்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த மொபைல் போனில் துவக்க விலை, 37,999 ரூபாய். இதில், 50 எம்.பி., 3.5x டெலிபோட்டோ கேமரா, 60 எப்.பி.பி.எஸ்., அல்ட்ரா கிளியர் 4 கே., எச்.டி.ஆர்., வீடியோ மற்றும் புதிய செயற்கை நுண்ணறிவு எடிட்டர் 2.0 தொழில்நுட்பம் ஆகிய வசதிகள் அமைந்துள்ளன.
இந்த மொபைல் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 6,900 ரூபாய் வரையிலான பரிசுகள், முன்னணி வங்கி கார்டுகளுக்கு, 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி மற்றும் எளிய தவணை முறை வசதி என, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, ஓப்போ தயாரிப்பு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தலைவர் சுஷாந்த் வஷிஷ்தா கூறுகையில், '' உலகளவில் 130 மில்லியனுக்கும் அதிகமானோர், ஓப்போ ரேனோ போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஓப்போ போன்கள் ஒவ்வொரு தருணங்களையும் மறக்க முடியாத தருணமாக மாற்றும்,'' என்றார்.
மேலும்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்
-
வியூகத்தை மாற்றிய குருவிகள் புது ரூட்டில் வருகிறது தங்கம்
-
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம் எம்.எல்.ஏ., பங்கேற்பு