ரூ.89,000 கோடி நிலுவை: ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
மும்பை: மஹாராஷ்டிராவில், சாலை பணிகளுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை 89,000 கோடி ரூபாயை உடனே விடுவிக்கக்கோரி ஒப்பந்ததாரர்கள் தொடர் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த ஓராண்டாக ஒப்பந்த தொகை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகைகளை உடனே விடுவிக்கக்கோரி, மாநிலம் முழுதும் மாவட்ட கலெக்டர்களிடம் முறையிடும் போராட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மஹாராஷ்டிரா மாநில ஒப்பந்ததாரர்கள் மஹாசங்கத்தின் தலைவர் மிலிந்த் போஸ்லே கூறியதாவது:
கடந்த ஆண்டு ஜூலை முதல் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை 89,000 கோடி ரூபாயை, இதுவரை மாநில அரசு விடுவிக்கவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில், சட்டசபை தேர்தல் நடந்ததால், சில மாதங்களுக்குபின் விடுவிப்பர் என எண்ணினோம். மாநிலம் முழுதும், ஐந்து லட்சம் ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் முதல் 20 கோடி ரூபாய் வரை ஒப்பந்த பணிக்கான தொகை நிலுவையில் உள்ளன.
இத்தொகையை அரசு விடுவிக்காததால், சாலை பணிகள் மேற்கொள்ள தேவையான உபகரணங்கள், இடுபொருட்களை வாங்க கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுதவிர பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் தவிக்கிறோம்.
எனவே, எங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத்தொகைகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகவே, நாங்கள் போராட்டத்தை துவக்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை