தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி: புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்த நாள். தற்போதைய தலாய் லாமாவின் இயற்பெயர் டென்சின் கியாட்ஸோ. திபெத்திய மக்களின் மத நம்பிக்கைப்படி, 600 ஆண்டுகளில் மறுபிறவி எடுத்த, 14வது தலாய் லாமா. தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அமெரிக்கா அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒற்றுமை, அமைதி ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் மூலம் தலாய் லாமா தொடர்ந்து மக்களை ஊக்குவித்து வருகிறார். திபெத்தியர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கு மரியாதை அளிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
திபெத்தியர்களின் தனித்துவமான மொழியியல், கலாசார மற்றும் மத பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இதில் மதத் தலைவர்களை குறுக்கீடு இல்லாமல் சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பது அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, 140 கோடி இந்தியர்களுடன் சேர்ந்து நானும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் ஒழுக்கத்தின் நீடித்த அடையாளமாக இருந்து வருகிறார். அவரது செயல் அனைத்து மதங்களிலும் மரியாதை மற்றும் போற்றுதலைத் தூண்டியுள்ளது. அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும்
-
லாக் அப் மரணம் அடைந்த அஜித்தின் சகோதரரும் மருத்துவமனையில் அனுமதி
-
பா.ஜ.,வை பார்த்து தி.மு.க.,வினருக்கு தூக்கம் போயிடுச்சு; நயினார் நாகேந்திரன்
-
5 மாதங்களில் 1,65,136 பேருக்கு நாய்க்கடி: 17 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி; கேரளாவில் ஷாக்
-
காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு