கல்லுாரி மாணவன் மீது போக்சோ வழக்குபதிவு

காங்கேயம், வெள்ளகோவிலை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவன், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்தார்.

இதுகுறித்த புகாரின்படி, காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement