ஏவல் துறையாக செயல்படும் காவல்துறை; தினகரன் பேச்சு
பவானி, ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையாம்பட்டியில், அ.ம.மு.க., ஒருங்கிணைந்த ஈரோடு புறநகர் மாவட்ட செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சி பொது செயலாளர் தினகரன் கலந்து கொண்டார்.
முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று சொல்கிறார். காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. மக்களின் நண்பர்களாக பாதுகாவலராக இருக்க வேண்டிய காவல்துறை, யாரோ ஒருவர் கொடுத்த புகாருக்கு, தமிழகமே வருத்தப்படும் அளவுக்கு, அஜித்குமார் என்ற இளைஞரை அடித்தே
கொன்றுள்ளனர். காவல்துறை மீது நம்பிக்கை இனி வராது எனும் அளவுக்கு தமிழகம்
தள்ளப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்துக்காக நடக்கும் தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர் மற்றும் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடுகின்றனர். கூட்டணி வைத்து மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைப்பில் உள்ளனர். 58 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்களில், 28,000 காலி பணியிடம் உள்ளது. 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மூடப்பட்டுள்ளது. ஏழை மக்களின் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட திட்டம், தற்போது கேள்விக்குறியாகி விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி, 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை