பயன்படாத ரயில் பெட்டிகள் தங்கும் அறைகளாக மாற்றம்
மதுரை:மதுரை ரயில்வே கோட்ட வணிகத்துறை சார்பில், ராமேஸ்வரம் ஸ்டேஷனில் ரயில் மற்றும்சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில் பாதுகாப்புடன் வசதியாக தங்குவதற்கு, ரயில் பெட்டியைதங்கும் விடுதியாக மாற்றும் திட்டத்திற்கு ஏலம் நடக்க உள்ளது.
இத்திட்டத்திற்காக ரயில்வே நிர்வாகம், போக்குவரத்திற்கு பயன்படாத 5 ரயில் பெட்டிகளை வழங்குகிறது. ஒப்பந்ததாரர், அதன் உட்புறத்தில் உரிய மாற்றங்கள் செய்து, புதுப்பித்து பயணிகள் தங்குமிடங்களாக மாற்ற வேண்டும்.
ஒப்பந்த காலம் 5 ஆண்டுகள். தங்குமிடத்திற்கான கட்டணம் சந்தை மாற்றத்திற்கு உட்பட்டது. ஜூலை 15 மதியம் 12:00 மணிக்கு ஏலம் நடைபெறும். விபரங்களுக்கு www.ireps.gov.in தளம் அல்லது 90038 62967ல் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
Advertisement
Advertisement