இன்ஜி., கலந்தாய்வு குழப்பங்களை தீர்த்தது தினமலர்

புதிய தகவல் ஏராளம்



பத்மா, மாணவி, மதுரை: ஆன்லைன் கவுன்சிலிங் தொடர்பாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புதிய தகவல்கள் கிடைத்தன. நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், அதற்கான படிப்புகள் எவை என்பது குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் அளித்த ஆலோசனைகள் பயனுள்ளவை.

எளிதானது கல்லுாரி தேர்வு



பூர்ணிமா, மாணவி, மதுரை: எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடம் தேர்வு செய்யலாம் என முடிவில் உள்ளேன். எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். தெளிவு கிடைத்தது.

குறிப்பாக தேசிய தரச்சான்று உள்ளிட்ட தகுதிகள், கட்டமைப்புகள், முந்தைய வேலைவாய்ப்புகளை ஆய்வு செய்து கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற ஆலோசனை அருமை. இதுபோல் வெளிநாட்டு மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற 'அட்வைஸ்' பயனுள்ளது.

சாய்ஸ் பில்லிங் தகவல் அருமை



சுந்தரி, பெற்றோர், மதுரை: சாய்ஸ் பில்லிங் குறித்த தகவல்கள் அருமை. குறிப்பாக 'அக்சப்ட் அன்ட் அப்வேர்டு' விருப்பம் கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயம், தவறு ஏற்பட்டால் எந்த வகையில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்ற தகவல் பயனுள்ளது. எவ்வாறு சிறந்த கல்லுாரிகளையும், பாடங்களையும் தேர்வு செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் அளித்த விளக்கம் எளிமையாக இருந்தது. கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டிய குழப்பம் தீர்ந்தது. நன்றி தினமலர்.

கவுன்சிலிங் செல்ல பேருதவியாக இருந்தது



தன்யஸ்ரீ, மாணவி, சாத்துார்: தினமலர் நாளிதழின் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கவுன்சிலிங்கை எதிர்கொள்வது குறித்து மிகவும் குழப்பமான நிலையில் இருந்தேன். இதில் பங்கேற்றதன் மூலம் எப்படி கவுன்சிலிங்கை எதிர்கொண்டு, நல்ல கல்லுாரியை தேர்வு செய்யலாம், எந்த பாடத்தினை படிக்கலாம் என்பது குறித்த முழு விவரங்களை நன்றாக தெரிந்து கொண்டேன். இது எனக்கு பேருதவியாக இருந்தது. இதில் பேசிய அனைவரின் கருத்துக்களும் என்னுடைய தற்போதைய கல்விக்கும், எதிர்கால வேலை வாய்ப்பிற்கும் வழிகாட்டியாக இருந்தது.

தெளிவு பெற்றேன்



அனீஸ் குமார், மாணவர், ராஜபாளையம்: என்னுடைய கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம், எந்த கோர்சில் சேர்ந்து படிக்கலாம் என்ற ஒருவித குழப்பம் இருந்தது. இதில் பங்கேற்றதன் மூலம் தெளிவு பெற்றுள்ளேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கவுன்சிலிங் குறித்தும் கல்லுாரி குறித்தும் இருந்த அச்சம் விலகியது. சென்ற ஆண்டு கட் ஆப் குறித்தும், இந்த ஆண்டு கட்ஆப் உயர்ந்துள்ளது குறித்தும் அறிந்து கொண்டு, நான் எந்த கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டும் எந்த கல்லுாரியில் இடம் கிடைக்கும் என்பதையும் தெளிவாக அறிந்து முடிவு எடுக்கும் நிலைக்கு வந்துள்ளேன்.

Advertisement