அறிமுக பயிற்சி திட்டம் வகுப்பு நிறைவு விழா 

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் ஒருவார கால பயிற்சி திட்டம் வகுப்பு நிறைவு விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். வரலாற்று துணை தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாமாண்டு மாணவர்களை வாழ்த்தி, கல்லுாரி படிப்பின் அவசியம் குறித்து விளக்கி பேசினர்.

விழாவில், இதில், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

கணினி அறிவியல் துறை தலைவர் தமிழரசி நன்றி கூறினார்.

Advertisement