முன்னாள் படைவீரர்களுக்கு 10ம் தேதி குறைதீர்வு முகாம் 

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான ஓய்வூதிய குறைதீர்வு முகாம் வரும் 10ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான ஓய்வூதிய குறைதீர்வு முகாம் கடந்த 30ம் தேதி திருச்சியில் துவக்கி வைக்கப்பட்டது. வரும் 11ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் 5 நடமாடும் வாகனம் மூலம் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காணப்படவுள்ளது.

அதன்படி, கடலுார் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி மொபைல் வாகனம் மூலம் ஓய்வூதியம் குறைதீர்வு முகாம் நடக்கிறது. இதில், இணையதள வசதிகளுடன் கணினி, பிரிண்டர், ஸ்கேனர், கைரேகை பதிவு கருவி போன்ற வசதிகளுடன் ஓய்வூதிய தலைமை அலுவலக அதிகாரிகள், கப்பற்படை ஓய்வூதிய அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகளால் ஓய்வூதிய ஆவணங்களில் பெயர் மற்றும் இதர தகவல்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், ஓய்வூதியத் தொகையை திருத்துதல், ஆதார் புதுப்பித்தல் போன்றவைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

எனவே, வரும் 10ம் தேதி கலெக்டர் அலுவலக குறைதீர்ப்பு கூட்டரங்கில் காலை 10:00 மணிமுதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் முகாமில், ஓய்வூதியம் தொடர்பான குறைகளுக்கு தீர்வுகண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement