முதல்வர் சித்தராமையாவை மாற்ற காங்கிரஸ் திட்டம்; பா.ஜ., முன்னாள் முதல்வர் சொல்வது இதுதான்

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்பட்டால், அவருக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என்று பா.ஜ., முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அப்போது, முதல்வர் பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களான சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, காங்கிரஸ் தலைமையின் தலையீட்டால், சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டி.கே.சிவகுமார் துணை முதல்வரானார்.
சித்தராமையா கர்நாடகா முதல்வராக 2 ஆண்டுகளை நிறைவு செய்து விட்ட நிலையில், டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்க இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. அவருக்கு ஆதரவாக பல காங்கிரஸ் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் குரல் கொடுத்தனர்.
அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, முதல்வராக நீங்கள் தொடர்வீர்களா? என்று நிருபர் ஒருவர் சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பினார். இதனால், கோபடைந்த அவர், "5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர். அதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகமா?" என்ற கூறினார்.
இதனிடையே, சாமுண்டி கோவிலில் தரிசனம் செய்த டி.கே. சிவகுமார், "முயற்சிகள் தோல்வியடையலாம். ஆனால் பிரார்த்தனைகள் வீணாகாது" என்று கூறினார். இதன்மூலம், முதல்வர் பதவிக்கான ஆசையை மறைமுகமாக கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை மாற்றம் செய்ய காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக பா.ஜ., முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:கர்நாடகாவின் முதல்வரை ஒவ்வொரு முறையும் மாற்றும் போதும் அவர்களுக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும். அநேகமாக சித்தராமையா மாற்றப்பட்டால், அவருக்கு கட்சியின் பிற்படுத்தப்பபட்டோர் நலத்துறையின் தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம். இருப்பினும், இது காங்கிரஸ் கட்சியின் உள் முடிவு, அதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
பர்மிங்காமில் வரலாறு படைத்த இளம் இந்திய அணி; ஆகாஷ் தீப் அபாரம்
-
இனி வீட்டில் இருந்தே ஸ்பீட் போஸ்ட் புக்கிங் செய்யலாம்; தபால் துறையின் அசத்தல் திட்டம்!
-
ஏமன் அருகே செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஹவுதி குழுவினர் அட்டகாசம்
-
ஜூலை 10ல் மேய்ச்சல் நில உரிமை மாநாடு: சீமான் அறிவிப்பு
-
நீலகிரி வனத்தில் வேட்டையாடிய பெண் உட்பட 5 பேர் கைது: துப்பாக்கிகள் பறிமுதல்
-
சர்வதேச நலன்களுக்கான சக்தி பிரிக்ஸ் கூட்டமைப்பு: பிரதமர் மோடி புகழாரம்