கொடி காய்கறிக்கு முக்கியத்துவம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தருகிறது. அதற்கு சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். வறட்சி காரணமாக நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர் வற்றி வருகிறது. இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்தவதைத் தவிர வேறு வழி இல்லை. அதிக தண்ணீர் தேவையுள்ள காய்கறிகள் சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். பல விவசாயிகள் காய்கறி சாகுபடிக்கு சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் தரக்கூடிய அவரை, பீர்க்கன், சுரைக்காய், புடலை உள்ளிட்ட கொடி காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Advertisement