தனித்தேர்வர்களுக்கு 8ம் வகுப்பு பொது தேர்வு

திருப்பூர்: ஆக., 18 முதல் 22 வரை தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வெழுத விரும்பும் தனித்-தேர்வர்கள் வரும், 10 முதல் 17 ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணைய வழியில் விண்-ணப்பிக்கலாம்.
முதன்முறை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி பதி-வுத்தாள் நகல், சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைய வழி விண்ணப்பத்தின் போது சமர்பிக்க வேண்டும்.


ஏற்கனவே தேர்வெழுதியவர்கள் தோல்வி அடைந்த பாடங்-களை எழுதுவதற்கு விண்ணப்பிக்கும் போது, முந்தைய மதிப்பெண் சான்றிதழ் நகல்களையும் இணைக்க வேண்டும். தேர்வு கட்டணம், 125 ரூபாய்; இணைய வழி பதிவு கட்டணம், 70 ரூபாய். மேலும் விபரங்களுக்கு www.dge.tn.gov.in இணையத-ளத்தைபார்க்கவும்.

Advertisement