ரயில்வே இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணி துவக்கம்

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணியினை எதிர்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
வில்லியனுார் தொகுதி அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் இணைப்புச் சாலை பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் சார்பில் 40 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கி, இணைப்பு சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதில், தேசிய நெடுஞ்சாலை கோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் ஜெயராஜ், இளநிலை பொறியாளர் கண்ணன், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தர்மராஜ், அவைத்தலைவர் ஜலால், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
'கூலி' வெற்றி பெற திருநள்ளாரில் பூஜை
-
'ஸ்பைஸ் ஜெட்' விமானம் கோளாறு ; சென்னை பயணியர் கடும் கொதிப்பு
-
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
-
தலைமை செயலகம் முன் வரையாடு சிலை
-
ரூ.50,000க்கு குழந்தை விற்பனை தாய் உட்பட மூவரிடம் விசாரணை
-
போக்குவரத்து அமைச்சருக்கு 'ஷாக்' கொடுத்த பஸ் ஊழியர்கள்