வீரபாண்டியில் ஜெ ., பேரவை திண்ணை பிரச்சாரம்

திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில், முகையூர் மேற்கு ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சியில் திண்ணை பிரசாரம் நடந்தது.

ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தனபால்ராஜ், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட மாணவர் அணி தலைவர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.

திண்ணைப் பிரசாரத்தில், கடந்த கால அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கினர்.

எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை செயலாளர்கள் செந்தில்குமார், விநாயகமூர்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ், திருக்கோவிலுார் நகர செயலாளர் சுப்பு, அரகண்டநல்லுார் நகர செயலாளர் ராஜ்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஏசுபாதம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கராஜ், ஒன்றிய அவை தலைவர் விநாயகம், மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் சுபாஷ், துணை செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement