மது விற்பனை செய்ய தடை செல்லம்பட்டு ஊராட்சியில் முடிவு

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த ச.செல்லம்பட்டு கிராமத்தில் மது விற்கவும், குடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி சார்பில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

தினசரி கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், விவசாயிகள் தங்களின் மொத்த வருமானத்தையும் டாஸ்மாக் கடைகளில் குடித்து அழித்து விடுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகின்றனர். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வருவதிற்கு முன்பு டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என அறிவித்த தி.மு.க., அறிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும், டாஸ்மாக் கடை எண்ணிக்கை குறையவில்லை.

இந்நிலையில், மதுவால் குடும்பங்கள் சீரழிவதை தடுக்க, சங்கராபுரம் ஒன்றியம் ச.செல்லம்பட்டு ஊராட்சியில், மது விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி சார்பில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இது கிராம மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement