நகை திருட்டு : 5 பேர் கைது

கூடலுார் : குமுளி அருகே தங்ககாசு திருட்டு வழக்கில் பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து நகை, ரொக்கப் பணம் மீட்கப்பட்டது.
கேரளா குமுளி அருகே ஓடைமேடை சேர்ந்த தாமஸ் என்பவர் வீட்டில் ஜூன் 29ல் 13 தங்கக்காசுகள் ரூ.40 ஆயிரம் ரொக்கம் திருடு போனது. எஸ்.ஐ., ஜார்ஜ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். திருட்டு நடக்கும் போது மரப்பலகை வாங்கி தருவதாக தாமசை அழைத்துச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜோமோன், ஜான்சன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தியதில் திருடப்பட்டதை ஒப்புக்கொண்டதால் இருவரையும் கைது செய்து, இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வந்தனர். சேர்ந்த மணிகண்டன் 38, பீர்மேடைச் சேர்ந்த அனீஸ் 23, மதுரை செக்கானுாரணியைச் சேர்ந்த பொன்னுத்தாய் 50, ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் மூன்று தங்க காசுகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.