கார் கவிழ்ந்து ஒருவர் பலி 7 பேர் காயம்

தேவகோட்டை, : தேவகோட்டை அருகே கார் வாய்க்காலில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார்.

திருச்சி சீனிவாசா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் 82. இவரது மனைவி நாகேஸ்வரி 72. இவர்கள் உட்பட 8 பேர் காரில் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் சென்றனர்.

அங்கு சுவாமி கும்பிட்டு விட்டு நேற்று மதியம் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர். காரை சுப்பிரமணியன் மகன் கோபிநாத் 45 ஓட்டினார். நேற்று மாலை தேவகோட்டை அருகே சிலாமேகநாடு கிராமம் அருகே வந்த போது, கார் நிலைதடுமாறி ரோட்டோர கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில், பலத்த காயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சுப்பிரமணியன் மனைவி நாகேஸ்வரி உயிரிழந்தார்.

காரில் இருந்த சுப்பிரமணியன், கோபிநாத், ரம்யா, ஹேமா, ஸ்ரேயா, ராஜேஸ்வரி 54, ஆகியோர் காயமுற்றனர். தேவகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement