நெற்பயிரில் அதிகரிக்கும் களைக்கொல்லி கவலையில் விவசாயிகள்

காரைக்குடி : சாக்கோட்டை அருகே நெற்பயிரில் வழக்கத்தை விட அதிகரித்துள்ள களைக்கொல்லியால் விவசாயம் பாதிப்படைந்ததாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. சாக்கோட்டை அருகே உள்ள ஏம்பவயலில் விவசாயிகள் கடந்த மாதம் நெல் விதைப்பில் ஈடுபட்டனர். விதைநெல் உழவு, உரம் என ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். தொடர்ந்து களை எடுத்து வந்தாலும், நெற்பயிர்கள் பரிந்து வரும் நேரத்தில், அதிகளவில் களைக்கொல்லிகள் உள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். விவசாயத்திற்கு போதிய ஆட்கள் கிடைக்காத நிலையில் அதிக களைக்கொல்லியால் விவசாயம் பாதிப்படைந்து உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது, தற்போது குண்டு நெல் விவசாயம் செய்துள்ளோம். 25 கிலோ விதை நெல்லை ரூ. ஆயிரத்து 200 க்கு வாங்கி விதைத்தோம். உழவு, உரம் என ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வரை செலவானது. விவசாயத்திற்கும் போதிய ஆட்கள் கிடைக்கவில்லை. நெற்பயிர் பரிந்து வரும் நிலையில் வழக்கத்தை விட அதிக களைக்கொல்லி தாக்கி பாதித்துள்ளன. மருந்து அடித்தாலும் மீண்டும் மீண்டும் அதிக அளவில் களைக்கொல்லிகள் உருவாகிறது. இதனால், பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்து, நெல் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement