பள்ளம் எது.. கால்வாய் எது... என புரியாமல் குப்பை கொட்டி வைப்பு

பரமக்குடி : பரமக்குடி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் நீர்நிலைகளை பள்ளங்களை மூடுவது போல் குப்பை கொட்டி அடைத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப கோடை காலத்திலும் தண்ணீரை சேமிக்கும் நோக்கில் குளம், குட்டை, ஏரிகள், கண்மாய் என உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் நீர்வழிப் போக்குக்கு கால்வாய் மற்றும் ஆறுகள் பிரதான பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் பிரதமரின் துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு பல லட்சம் ரூபாயில் ஒவ்வொரு நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் குப்பையை பிரித்தெடுப்பதில் ஒவ்வொரு நிர்வாகமும் தங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல் விட்டு விடுகின்றனர்.
தொடர்ந்து துாய்மை பணியாளர்களால் அள்ளப்படும் குப்பை மற்றும் பொதுமக்களால் வெளியேற்றப்படும் குப்பை அனைத்தையும் பள்ளங்களை நோக்கி வீசி செல்கின்றனர். இதனால் நீர் மேலாண்மைக்கு என உருவாக்கப்பட்ட நீர் நிலைகள் அடைபட்டு நீர் வழித்தடம் மூடப்படுகிறது.
மேலும் குப்பை கலந்த நீர் குடிநீருக்கும் மற்றும் விவசாயத் தேவைக்கும் பயன்படுத்த முடியாத சூழல் உண்டாகியுள்ளது.
ஆகவே ஊராட்சி, நகராட்சி நிர்வாகம் உட்பட ஒவ்வொரு பகுதிகளிலும் குப்பை கொட்டும் தனிநபரையும் கண்டறிந்து நீர் நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
-
பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால் தி.மு.க., அணியை வீழ்த்தலாம்: நாகேந்திரன்
-
தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்
-
தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை
-
குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை
-
கோவிலில் திருடிய 2 பேர் கைது